LATEST NEWS
“ஸ்டாலின் பிளான் பண்ணா… விஜய் எக்சிகியூட் பண்ணுவாரு..” கைதில் முடிந்த திருச்சி கிழக்கு சீட் அரசியல்..!!
இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் வியூகத்தை CM விஜய் வகுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட திமுக திட்டமிட்டிருந்த அன்பில் மகேஸுக்கு செக் வைக்கும் வகையில், தவெக அரசு அவரைத் தற்போது கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்பில் மகேஸின் கைதைத் தொடர்ந்து, திமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பல முன்னாள் அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து கட்டம் கட்டும் நடவடிக்கைகளிலும் தவெக தீவிரமாகத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நகர்வுகள் திமுக தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ள நிலையில், எதிர்வரும் இடைத்தேர்தல் களம் அரசியல் வட்டாரத்தில் மிகக் கடுமையான மோதல்களையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
