CRIME
“பெத்த மனசு எப்படி துணிஞ்சது..?” பிறந்த சில நிமிடங்களில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. உடலில் வீசிய மது வாசனை… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் தொகுதிக்குட்பட்ட ரகுநாதபாலம் மண்டலத்தில் உள்ள வி.ஆர்.பஞ்சாரா கிராமத்தில், பிறந்த சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மதுவின் வாசனை வீசும் நிலையில் இரக்கமின்றித் கைவிடப்பட்டுக் கிடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துணியால் சுற்றப்பட்டு, பசியால் அழுதுகொண்டிருந்த அந்தப் பச்சிளம் குழந்தையைக் கிராம மக்கள் தற்செயலாகக் கண்டறிந்துள்ளனர். உடனடியாகப் பதற்றமடைந்த கிராமத்தினர், இதுகுறித்து உள்ளூர் காவல் துறையினருக்கு அவசரமாகத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியின் ஆஷா பணியாளரின் தகுந்த உதவியுடன் குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், முதலுதவி மற்றும் தீவிரச் சிகிச்சைக் கண்காணிப்பிற்காக அக்குழந்தை உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவர்கள் குழுவினர் தற்போது அந்தப் பச்சிளம் குழந்தைக்குத் தீவிரச் சிகிச்சை அளித்து உன்னிப்பாகக் கண்காணித்து வரும் நிலையில், குழந்தையைக் கைவிட்டுச் சென்ற கல்நெஞ்சம் படைத்த பெற்றோர் யார் என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
