LATEST NEWS
“வெளிய யோக்கியன் மாதிரி நடிப்பாங்க..” ஊசி போடுவேன்னு சொன்னதும் ஓட்டம் பிடித்த போலி பிச்சைக்காரன்..! வீடியோவை பகிர்ந்து முதல்வர் சொன்ன அந்த ஒரு வார்த்தை..!!
அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இதுவரை 537 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளின் போலித்தனத்தை விமர்சித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அசாம் மாநிலத்தில் சிறுமிகளுக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கும் கொடூர வழக்கத்திற்கு எதிராக அம்மாநிலக் காவல் துறை அதிரடி வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரையில் 460 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 537 குற்றவாளிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊசி போடுவதாகக் கூறியதும் கால்கள் முடங்கியதாக நடித்த பிச்சைக்காரன் மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்த வைரல் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “குழந்தைத் திருமணக் குற்றவாளிகள் வெளியில் யோக்கியர்கள் போல நடித்து, இறுதியில் காவல் துறையிடம் வசமாகச் சிக்குவதற்கு இந்த வீடியோவே ஒரு காட்சி உதாரணம். அசாமில் குழந்தைத் திருமணம் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை நமது வேட்டை ஓயவே ஓயாது” என அதிரடியாகப் பிரகடனம் செய்துள்ளார்.
