ஆதாரம் எதையும் விடக்கூடாது..” பட்டப்பகலில் 16 வயது சிறுவனை கட்டிப்போட்டுதுணிகரம்..! ரூ.2.3 கோடி+ சிசிடிவி டிவிஆர்-ஐயும் தூக்கிச் சென்ற கில்லாடி கொள்ளையர்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஆதாரம் எதையும் விடக்கூடாது..” பட்டப்பகலில் 16 வயது சிறுவனை கட்டிப்போட்டுதுணிகரம்..! ரூ.2.3 கோடி+ சிசிடிவி டிவிஆர்-ஐயும் தூக்கிச் சென்ற கில்லாடி கொள்ளையர்கள்..!!

Published

on

டெல்லியின் லாகூரி கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவன அலுவலகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல், அங்கு பணிபுரிந்து வந்த 16 வயது சிறுவனைக் கட்டிப்போட்டுவிட்டு சுமார் ரூ.2.3 கோடி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாகூரி கேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ‘கூச்சா பிரிஜ்நாத்’ பகுதியில் உள்ள ‘விஷ்ணு காந்தி ஃபர்ம்’ என்ற தனியார் நிறுவன அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10:30 மணியளவில் இந்தத் துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள், அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் விகேஷ் என்ற 16 வயது சமையல் உதவியாளர் மட்டும் தனியாக இருந்துள்ளார். உள்ளே புகுந்த கும்பல், அந்தச் சிறுவனைப் பேச முடியாதவாறு பிளாஸ்திரிகளால் கை, கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு, அங்கிருந்த ரூ. 2.3 கோடி பணத்தைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளது. கொள்ளையடித்த பணத்துடன் மட்டுமன்றி, தங்களைப் பற்றிய ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கக் கூடாது என்பதற்காக, அந்த அலுவலக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் இயந்திரத்தையும் கொள்ளையர்கள் கையோடு கழற்றிச் சென்றுள்ளனர்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லாகூரி கேட் காவல் நிலைய போலீசார், பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய நான்கு மர்ம நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in