“அப்பாவைக் கொல்றதுக்கு பதிலா கால்ல சுட்டிருக்கலாம்..” ரூ.1 லட்சம் கொள்ளையனின் மகள் வெளியிட்ட கண்ணீர் வாக்குமூலம்.. வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அப்பாவைக் கொல்றதுக்கு பதிலா கால்ல சுட்டிருக்கலாம்..” ரூ.1 லட்சம் கொள்ளையனின் மகள் வெளியிட்ட கண்ணீர் வாக்குமூலம்.. வைரல் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேசம் ஏட்டா பகுதியில், ரூ.1 லட்சம் தலைமதிப்பு கொண்ட தேடப்படும் குற்றவாளியான வீரேந்திர சிங் என்பவரைப் போலீஸார் என்கவுண்டர் செய்த விவகாரத்தில், அவர் காவலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். வீரேந்திர சிங் மீது 53 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நகைக்கடை கொள்ளை வழக்கு ஒன்றில் அவர் தேடப்பட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் 27 அன்று நடைபெற்ற என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாகப் போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், அக்டோபர் 25 அன்றே தனது தந்தையை ஒரு போர்வையால் மூடி போலீஸார் எடுத்துச் சென்றதாக அவரது மகள் நீலம் குற்றம் சாட்டியுள்ளார்.

“அப்பாவைக் கொல்வதற்குப் பதிலாக அவரது காலில் சுட்டுக் கைது செய்திருக்கலாம்” என்று வீரேந்திர சிங்கின் மகள் நீலம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். போலீஸ் காவலில் வைத்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை இது என அவரது குடும்பத்தினர் நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து உரிய சட்டபூர்வ விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அரசியல் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in