அப்பாவும் போய்ட்டாங்க..! தாயைத் தொடர்ந்து தந்தையும் பலி.. அனாதையாக தவிக்கும் பிள்ளைகள்..! சாத்தான்குளம் கொடூர சம்பவத்தின் சோக முடிவு..!! – cinefeeds
Connect with us

CRIME

அப்பாவும் போய்ட்டாங்க..! தாயைத் தொடர்ந்து தந்தையும் பலி.. அனாதையாக தவிக்கும் பிள்ளைகள்..! சாத்தான்குளம் கொடூர சம்பவத்தின் சோக முடிவு..!!

Published

on

சாத்தான்குளம் முதலூரில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காதல் விவகாரம் காரணமாக ஞானப்பிரகாஷ் என்பவர் வீடு புகுந்து தம்பதியரை தாக்கியதுடன், அவர்களின் 2 சிறுமிகளையும் கடத்தி சென்றுள்ளார்.

இந்த கொடூர தாக்குதலின் போதே தாய் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் ICU பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தந்தை முத்துகிருஷ்ணனும் இன்று உயிரிழந்துள்ளார். ஒரே நேரத்தில் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் அந்த அப்பாவி குழந்தைகளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in