CRIME
நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! வீடு புகுந்து தம்பதியைத் தீர்த்துக்கட்டிய கொடூரம்…! அடுத்தடுத்து உதிரும் உயிர்களால் உறைந்துபோன தூத்துக்குடி..!!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த மர்மக் கும்பல் ஒன்று தம்பதியினரை சரமாரியாக தாக்கியதில், மனைவி மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் முத்துக்கிருஷ்ணனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலின் போது அவர்களது மகனும் தாக்கப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்த சிறுமிகளும் கடத்தப்பட்டனர்.
இந்த கொடூர சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமிகள் தற்போது காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பரோட்டா மாஸ்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தம்பதியைக் கொலை செய்து சிறுமிகளைக் கடத்திய கும்பலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
