“ராணுவ வீரரைக் கொன்று வீடியோ எடுக்கச் சதியா..?” லக்னோவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் அதிரடி கைது.. உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ராணுவ வீரரைக் கொன்று வீடியோ எடுக்கச் சதியா..?” லக்னோவில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் அதிரடி கைது.. உலுக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பாகிஸ்தான் உளவு அமைப்பின் கையாள் ஷாஜாத் பட்டி என்பவனுடன் தொடர்புடைய 4 சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளை உபி பயங்கரவாத தடுப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர் சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ககன்தீப் சிங், ரஜத் குமார், கிரிஷ் மற்றும் இவர்களது மைனர் கூட்டாளி ஆகியோர் ராணுவம் அல்லது காவல் துறைக்குச் சொந்தமான முக்கியத் தளங்களின் மீது தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் தீட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது ஒரு ராணுவ வீரரைக் கொன்று, அதனை வீடியோவாகப் பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்பதும் இவர்களின் கொடூரத் திட்டமாக இருந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்த நாசகாரக் கும்பலிடமிருந்து ஒரு வெளிநாட்டுத் துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் லக்னோவில் உள்ள பட்டியின் வலையமைப்பைச் சேர்ந்த ஒரு நபரால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்காக இவர்களுக்கு 6 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதும், அதில் 3 லட்ச ரூபாய் முன்பணமாக ஏற்கனவே இந்த நான்கு பேருக்கும் வழங்கப்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உளவுத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் உத்தரப் பிரதேசத்தில் நடக்கவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதம் மற்றும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in