நீங்க யாரையும் காப்பாத்த போறது இல்ல… அதனால பொண்ணுங்க கையில இதை கொடுங்க… கனிமொழி எம்பி ஆவேசம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீங்க யாரையும் காப்பாத்த போறது இல்ல… அதனால பொண்ணுங்க கையில இதை கொடுங்க… கனிமொழி எம்பி ஆவேசம்..!!

Published

on

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய அரசைக் கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்ட மேடையில் மிகவும் ஆவேசமாகப் பேசிய கனிமொழி, தவெக அரசை நேரடியாகச் சாடினார். “நீங்கள் எப்படியும் யாரையும் காப்பாற்றப் போவது இல்லை; அதனால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் ரேஷன் கார்டு மூலம் தயவு செய்து பெப்பர் ஸ்ப்ரே கொடுங்கள்” என்று அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும், குழந்தைகளுக்கு மோதிரம் போன்ற சீர் வரிசைகளை அரசு வழங்க வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் நிர்வாகத் திறமையின்மையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போய்விட்டதாகக் கனிமொழி முன்வைத்த இந்த விமர்சனம், திமுக மற்றும் தவெக ஆகிய இரு தரப்பினரிடையே சமூக ஊடகங்களில் ஒரு புதிய அரசியல் வார்த்தைப் போரைத் துவக்கி வைத்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in