LATEST NEWS
“உடனே ராஜினாமா செய்ங்க..!” அமைச்சர் CTR நிர்மல் குமாருக்கு வந்த கடும் நெருக்கடி.. ஆர்.பி.உதயகுமார் அதிரடி ஆட்டம்..!!
சிறைகளில் கைதிகள் தப்பியோடிய சம்பவம் மற்றும் தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுப் பிரச்னை ஆகியவை தவெக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிர்வாகக் குறைபாடுகளை மறைக்கவும், எழுந்துள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக வெற்றிக் கழக அரசு திட்டமிட்டு வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
சிறைத்துறையின் அலட்சியத்தாலேயே கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர்வதாகவும், இதற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சார்ந்த இந்த முக்கியப் பிரச்னைகளில் அரசு தோல்வி அடைந்துவிட்டதால், அமைச்சர் நிர்மல் குமார் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் திட்டவட்டமாகக் கோரியுள்ளார்.
