அடக்கடவுளே..! டிராக்டர் மீது விழுந்த உயர்மின்னழுத்தக் கம்பி.. மகனைக் காப்பாற்றப் போய்தந்தையும் பலி..! ரூ. 6 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கடவுளே..! டிராக்டர் மீது விழுந்த உயர்மின்னழுத்தக் கம்பி.. மகனைக் காப்பாற்றப் போய்தந்தையும் பலி..! ரூ. 6 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் அறிவிப்பு..!!

Published

on

திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் (வயது 21) மற்றும் அவரது தந்தை ராஜா (வயது 49) ஆகியோர் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதியன்று விவசாயக் கூலி வேலைக்காக நஞ்சை நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக அப்பகுதியிலிருந்த உயர் அழுத்த மின்பாதை மின்கம்பி மீது டிராக்டர் மோதியதுடன், மின்கம்பியும் டிராக்டர் மீது விழுந்தது.

இதன் காரணமாக டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்ததோடு, அருகில் வேலை செய்துகொண்டிருந்த அவரது தந்தை ராஜா, தனது மகனைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தந்தை மற்றும் மகன் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஆறு லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in