ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை.. முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு – அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட ஹேப்பி நியூஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை.. முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு – அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட ஹேப்பி நியூஸ்..!!

Published

on

தமிழ்நாட்டு மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், அதற்கான முதற்கட்ட பணிகளை முதலமைச்சர் விஜய் தொடங்கிவிட்டதாகவும் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் நேற்று நடைபெற்ற நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசிய அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உள்ள தொழில்நுட்பக் குளறுபடிகளைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சரிபார்ப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், தகுதியுள்ள அனைத்து மகளிரின் வங்கி கணக்குகளிலும் ரூ.2,500 உரிமைத்தொகை நேரடியாக வரவு வைக்கப்படும் என அமைச்சர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

ஏற்கனவே இந்தத் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில், தற்போது அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மகளிர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக் கணக்குகள் எப்போது சரிசெய்யப்படும், எப்போது பணம் கைக்கு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ்நாட்டுப் பயனாளிகள் காத்திருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in