LATEST NEWS
“கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாங்களே…” மனைவியின் தங்க நகைகளை ஆட்டைய போட்ட கணவன் & மகன்..! 40 கோடி நஷ்டஈடு கட்டணும்னு கோர்ட் கொடுத்த ‘செம’ சாட்டையடி..!!
துபாயில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. அங்குள்ள ஒரு நபர், தனது மகனுடன் சேர்ந்து சொந்த மனைவியின் வீட்டில் இருந்த கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் பணத்தை திருடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம், கணவர் மற்றும் மகனை குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, பாதிக்கப்பட்ட மனைவிக்கு இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி ரூபாய் (16.1 மில்லியன் திர்ஹம்) இழப்பீட்டுத் தொகை வழங்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் 15.1 மில்லியன் திர்ஹம் திருடப்பட்ட பொருட்களின் மதிப்புக்கானது, மீதமுள்ள 1 மில்லியன் திர்ஹம் மனைவிக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்புக்கான நப்பீடாகும்.ஊடகங்களின் தகவல்பபடி, கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட காலமாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்ட கணவர், தனது மகனின் உதவியோடு வீட்டில் இருந்த மனைவியின் 100-க்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகள், பிராண்டட் கடிகாரங்கள் மற்றும் பெரும் தொகையான பணத்தை அப்புறப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மனைவி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கினை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம் , தந்தை மற்றும் மகனுக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்ததுடன், திருடப்பட்ட பொருட்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தது.
குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தத் துரோகத்தால் தனக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலுக்கும் பொருளாதார இழப்புக்கும் எதிராக அப்பெண் குடிமை நீதிமன்றத்தில் தனி வழக்குத் தொடர்ந்தார். அதில் தங்கத்தின் தற்போதைய விலை மற்றும் மன உளைச்சலுக்காக சுமார் 125 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரினார். வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், அனைத்து சான்றுகளையும் ஆராய்ந்து, கணவரும் மகனும் இணைந்து பாதிக்கப்பட்ட மனைவிக்கு மொத்தம் 16.1 மில்லியன் திர்ஹம் (தோராயமாக ரூ. 40 கோடி) செலுத்த வேண்டும் என்று இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
