அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை…! சீமானுக்கு அதிமுக கொடுத்த திடீர் அதிர்ச்சி.. களமிறங்கும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை…! சீமானுக்கு அதிமுக கொடுத்த திடீர் அதிர்ச்சி.. களமிறங்கும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்..?

Published

on

அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தமிழகக் காவல்துறையின் முன்னாள் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டான வெள்ளத்துரை அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் அவரை அக்கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களம் இறக்க அக்கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். மேலும், இந்த இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் மறைமுக ஆதரவுடன் சீமான் களம் இறங்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் அங்கு போட்டி கடுமையாக இருக்கும் என்றும் பரவலாக அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டு வந்தது.

Advertisement

இத்தகையச் சூழலில், அதிமுக தங்களது ஆதரவை சீமானுக்கு வழங்காமல் நேரடியாகத் தங்களது வேட்பாளரைக் களம் இறக்கத் திட்டமிட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. வெள்ளத்துரை போன்ற ஒரு முக்கியப் புள்ளியை அதிமுக வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளதாக வெளியாகும் இந்தத் தகவல்கள், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கு தற்பொழுது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in