CRIME
நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! உழைத்த சம்பளத்தை வாங்கச் சென்ற 27 வயது ஆசிரியை.. வெள்ளை கார் மர்மம் என்ன..? சடலமாக வீடு திரும்பிய பரிதாபம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் தேரியா மாவட்டத்தில், 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியை ராணி விஸ்வகர்மா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூரைச் சேர்ந்த இவர், சனிக்கிழமை காலை தனது சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், மதியம் 3 மணியளவில் பள்ளியிலிருந்து கிளம்பியவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவருடைய மொபைல் போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைப் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
அவர் காணாமல் போன அன்றைய தினமே சனிக்கிழமை இரவு 7 மணியளவில், கன்ஹோலி கிராமத்திற்கு வெளியே ஒரு வெள்ளை நிற காரில் வந்த மர்ம நபர்கள், ராணியின் உடலை அங்கிருந்த புதருக்குள் வீசிவிட்டுத் தப்பியோடினர். இதனைப் பார்த்த உள்ளூர் கிராம மக்கள் காரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றும், காரின் ஓட்டுநர் அதிவேகமாகத் தப்பியோடிவிட்டார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படத்தைக் கண்டு கிராம மக்கள் அவரது உடலை அடையாளம் கண்டு குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். தங்களது தேவைகளுக்காகச் சம்பளம் வாங்கச் சென்ற பெண், சடலமாக வீடு திரும்பிய இந்த கொடூரச் சம்பவம் குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
