“நான் இல்லாத உலகத்தில அவங்களால வாழ முடியாது..” 3 பிஞ்சு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு… உருக்கமான கடிதம் எழுதிவிட்டு குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் இல்லாத உலகத்தில அவங்களால வாழ முடியாது..” 3 பிஞ்சு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு… உருக்கமான கடிதம் எழுதிவிட்டு குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தாய்..!!

Published

on

ஹரியானா மாநிலம் சோனிபத் மாவட்டத்தில் உள்ள முல்தானா கிராமத்தில், நிலத் தகராறு மற்றும் மாமியார் குடும்பத்தினரின் தொல்லை காரணமாக தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ஜெய்தேவ் மற்றும் ரீமா (37) தம்பதியருக்கு ரிஹானா (11), அர்ஜு (7) என்ற இரு மகள்களும், துஷ்யந்த் (4) என்ற ஒரு மகனும் இருந்தனர். மாமியார் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை கணவரின் சகோதரரான ரிங்கு என்பவரின் பெயரில் பதிவு செய்ததே இந்தத் துயரத்திற்கு மூலக்காரணமாக அமைந்துள்ளது.

தங்களுக்கு உரிய சொத்து எதையும் தராமல், நிலப் பதிவு நடந்த நாள் முதலே மாமியார் வீட்டார் தன்னைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்ததாக ரீமா தான் எழுதிய தற்கொலைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். சொத்து விவகாரம் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் தொடர் குடைச்சலால் கடந்த சில காலமாகவே தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக அவர் அந்த கடிதத்தில் உருக்கமாக விவரித்துள்ளார். தனது மரணத்திற்குப் பிறகு தன் பிஞ்சு குழந்தைகள் தாயில்லாமல் தவிக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே அவர்களுக்கு முதலில் விஷம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்தக் கடிதத்தில், தனது மரணத்திற்குப் பிறகு தன் குழந்தைகள் தனித்து விடப்படக் கூடாது என்ற நோக்கில் இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கணவர் ஜெய்தேவ் மிகவும் நல்லவர் என்றும், இந்தச் சம்பவத்திற்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதால் அவரை யாரும் துன்புறுத்த வேண்டாம் என்றும் ரீமா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in