CRIME
“மதியம் 3 மணிக்கே கிளம்பிட்டாங்க…” சம்பளம் வாங்கப் போன 27 வயது ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்.. புதருக்குள் சடலத்தை வீசிய வெள்ளை நிற கார்..திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் தேவ்ரியாவில், தனது மாதச் சம்பளத்தை வாங்குவதற்காகப் பள்ளிக்குச் சென்ற 27 வயது தனியார் பள்ளி ஆசிரியை ராணி விஸ்வகர்மா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூரைச் சேர்ந்த ராணி, பிரம்மபூரில் உள்ள ஒரு தனியார் அகாடமியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை காலை 8:30 மணியளவில், அன்றைய தினம் தனது சம்பளத்தைப் பெறப்போவதாகக் குடும்பத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது அவர் மதியம் 3 மணிக்கே கிளம்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், தேவ்ரியாவின் ருத்ரபூர் எல்லைக்குட்பட்ட கன்ஹௌலி கிராமத்திற்கு வெளியே உள்ள புதர்க்காட்டில் ராணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சம்பவத்தன்று மாலை, அங்கு வந்த ஒரு வெள்ளை நிறக் காரில் இருந்த நபர்கள் ராணியின் உடலை புதரில் வீசிவிட்டுத் தப்பியோடியதை அப்பகுதி மக்கள் நேரில் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக அந்த காரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்றபோதிலும், குற்றவாளிகள் காரில் தப்பிவிட்டனர். தனது உழைப்பிற்கான சம்பளத்தைப் பெறச் சென்ற ஒரு இளம் ஆசிரியை, பிணமாக வீடு திரும்பிய இந்த கொடூரச் சம்பவம் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த வெள்ளை நிறக் காரையும் அதில் வந்த கொலையாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
