கண்காட்சியில் நேர்ந்த விபத்து.. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பிரம்மாண்ட கண்ணாடி.. 4 சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயம்!.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

கண்காட்சியில் நேர்ந்த விபத்து.. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பிரம்மாண்ட கண்ணாடி.. 4 சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயம்!.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பக்ர்பூர் பகுதியில், உர்ஸ் திருவிழா மேடையில் நடைபெற்ற ‘ஜல்பரி’ கண்காட்சியின் போது திடீரென 20,வாட்டர் டேங்க் கண்ணாடி உடைந்து சிதறியதில் 4 சிறுவர்கள் படுகாயமடைந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பக்ர்பூர் டவுன் பகுதியில் உள்ள தாதா மியான் உர்ஸ் திருவிழா சந்தையில் இந்த ஜல்பரி ஷோவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் பலர் டிக்கெட் எடுத்து ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தண்ணீருடன் கூடிய அந்த பிரம்மாண்ட கண்ணாடித் தொட்டி பயங்கர சத்தத்துடன் உடைந்து சிதறியதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

கண்ணாடித் தொட்டி உடைந்த வேகத்தில் அங்கிருந்த மக்கள் அனைவரும் தங்களின் உயிரைக் காத்துக் கொள்ள நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடியதால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இந்த விபத்தில், தொட்டியின் அருகே நின்று நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அர்ஷ், பர்ஹூ, அஹத் கான் மற்றும் முகமது சாதிக் ஆகிய நான்கு அப்பாவி சிறுவர்கள் உடைந்த கண்ணாடிகளின் கூர்மையான துகள்கள் பாய்ந்து பலத்த காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பக்ர்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுள் இரு சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in