CRIME
சர்வதேச எல்லையில் பயங்கரம்..! பிஎஸ்எஃப் வீரர்களின் துப்பாக்கிகளைப் பறித்து.. 100 பேர் கொண்ட கடத்தல் கும்பல் துணிகரத் தாக்குதல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
திரிபுரா மாநிலத்தின் பாக்ஸாநகர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே, கடத்தல்காரர்கள் நடத்திய கொடூரமான தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயமடைந்துள்ள சம்பவம் எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கடத்தல் கும்பல் ஒன்று எல்லையைத் தாண்ட முயன்றபோது, அங்கிருந்த பிஎஸ்எஃப் வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது திடீரென ஆயுதங்களுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினரைச் சூழ்ந்துகொண்டு பயங்கரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது, பிஎஸ்எஃப் வீரர்களின் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அந்த கடத்தல் கும்பல் பறித்துச் சென்றதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாக்ஸாநகர் எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த பிஎஸ்எஃப் வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பறிபோன ஆயுதங்களை மீட்டெடுக்கவும், தாக்குதலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களைக் கைது செய்யவும் வங்கதேச எல்லைக் காவல்படையினருடன் இணைந்து பிஎஸ்எஃப் அதிகாரிகள் தீவிர பேச்சுவார்த்தை மற்றும் கூட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்களின் ஆயுதங்கள் பறிக்கப்பட்ட இந்த துணிகரச் சம்பவம் எல்லையோரக்
