“பேசாவிட்டால் கணவனைக் கொன்னுடுவேன்” மிரட்டியபடியே ரீல்ஸ் சாக்கில் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரன்… மனைவியின் ஒருதலைக் காதலனால் வந்த வினை..!! – cinefeeds
Connect with us

CRIME

“பேசாவிட்டால் கணவனைக் கொன்னுடுவேன்” மிரட்டியபடியே ரீல்ஸ் சாக்கில் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரன்… மனைவியின் ஒருதலைக் காதலனால் வந்த வினை..!!

Published

on

பீகார் மாநிலம் சஹர்சா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற தொழிலாளியை, அவரது மனைவியின் ஒருதலைக் காதலனான மனிஷ் என்பவன் தனது நண்பனுடன் சேர்ந்து கர்நாடகாவில் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். தொழிலாளர் வேலைக்காக சந்தோஷை கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதிக்கு மனிஷும், அவனது நண்பன் ராஜ்குமாரும் அழைத்துச் சென்றுள்ளனர். அக்டோபர் 20 அன்று, மது அருந்துவதற்காக ஒரு மலைப்பகுதிக்குச் சென்ற அவர்கள், ரீல்ஸ் எடுப்பதாகக் கூறி சந்தோஷின் கழுத்தில் துண்டை மாட்டியுள்ளனர்.

அங்கு மனிஷ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து சந்தோஷைக் கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது அடையாளத்தை மறைப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சந்தோஷின் மனைவி லட்சுமி தேவி கூறுகையில், மனிஷ் தன் மீது ஒருதலைக் காதலில் இருந்ததாகவும், தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தி, பேசாவிட்டால் கணவரைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

முன்னதாகக் கடன் சுமை காரணமாக, கிராமத்திற்கு வந்திருந்த கணவரை லட்சுமி தேவி மீண்டும் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். கணவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆதாரங்களின் அடிப்படையில் கொலையாளிகளான மனிஷ், ராஜ்குமார் மற்றும் இந்தச் சதியில் ஈடுபட்ட பிற நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in