LATEST NEWS
BREAKING : சொத்துக் குவிப்பு வழக்கில் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்… பெரும் பரபரப்பு..!!
முன்னாள் அமைச்சரும் தவெக நிர்வாகியுமான சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை அன்று அமலாக்கத்துறையின் மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜயபாஸ்கருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அவர் தீவிரமாகச் செயல்பட்டு வரும் இந்தச் அரசியல் சூழலில், அமலாக்கத்துறையின் இந்த அடுத்தகட்ட அதிரடி நகர்வு அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.
ஏற்கெனவே தவெக அரசுக்கு பல்வேறு அரசியல் நெருக்கடிகள் எழுந்து வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சி.விஜயபாஸ்கருக்கு எதிராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது தவெக கூடாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வரும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அவர் ஆஜராவாரா? அல்லது கூடுதல் கால அவகாசம் கேட்பாரா? என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் திருப்பங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
