CRIME
“சொந்த சித்தப்பாவே செய்த துரோகம்..?” 23 ஆண்டுகள் கழித்து வந்த சகோதரர்கள்.. சொந்த வீட்டிற்குள் நுழைய விடாமல் பூட்டுப் போட்ட கொடூரம்.. பரபரப்பு பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தின் மல்ஹிபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லக்ஷ்மன்பூர் செம்ரஹ்னியா கிராமத்தில், சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய இரண்டு உடன்பிறந்த சகோதரர்களை அவர்களின் சொந்த வீட்டிற்குள் நுழைய விடாமல், சித்தப்பா வீட்டைப் பூட்டி விவசாய நிலத்தையும் ஆக்கிரமித்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பூர்வீக வீடு மற்றும் சொத்து விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள இந்தத் தகராறில், அந்தச் சகோதரர்களுக்குச் சொந்தமான நான்கு பிகா விவசாய நிலத்தையும் சித்தப்பா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்களின் சொந்த ஊருக்கும், பூர்வீக வீட்டிற்கும் ஆசையோடு திரும்பிய அந்த இரண்டு சகோதரர்களும், சித்தப்பாவின் இந்த அத்துமீறலால் கடந்த 4 நாட்களாக வீதிக்கு வந்து தங்களது சொந்த வீட்டிற்கு வெளியேயே தங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சொத்துத் தகராறு மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மல்ஹிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதோடு, இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பூர்வீகச் சொத்தை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
