CRIME
“அடப்பாவமே.. லேட்டா வந்தது குற்றமா..?” பைக் ரைடு கூட்டிட்டுப் போய் நண்பனைகயே கால்வாயில் தள்ளிவிட்ட கொடூரம்.. டீக்கடை பார்ட்னரின் வெறிச்செயல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
குஜராத் மாநிலம் வதோதராவின் கோர்வா பகுதியில் கூட்டாகச் சேர்ந்து ‘சாய் கா அட்டா’ என்ற பெயரில் தேநீர் கடை நடத்தி வந்த மன்மோகன் சிங் (25) என்ற வாலிபரை, கடைக்குச் சரியான நேரத்திற்கு வராதது குறித்த தகராறில் அவரது தொழில் கூட்டாளியான சுஃபியான் அப்துல் சத்தார் சித்திகி (25) என்ற இளைஞர் நர்மதா கால்வாயில் தள்ளிவிட்டுக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 26 அன்று இரவு கடைக்கு வருவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சுஃபியான் மன்மோகனைத் தனது இருசக்கர வாகனத்தில் கோர்வா மதுநகர் பகுதியில் உள்ள நர்மதா கால்வாய் அருகே அழைத்துச் சென்று, அங்கு ஏற்பட்ட தகராறில் அவரை ஓங்கி கால்வாய்க்குள் தள்ளிவிட்டுள்ளார். இதில் நீச்சல் தெரியாத மன்மோகன் சிங் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மன்மோகன் சிங் காணாமல் போனது குறித்து எழுந்த சந்தேகத்தின் பேரில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, சுஃபியான் மன்மோகனை அழைத்துச் சென்றது உறுதியானது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சுஃபியானை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியபோது அவர் மன்மோகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மன்மோகனின் உடலைக் கண்டறியப் பஞ்சவடி கால்வாயிலிருந்து பத்ரா நோக்கி சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்குத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், இறுதியில் ஹிங்லோட் கிராமத்திற்கு அருகே அவரது உடல் மீட்கப்பட்டது. தொழில் கூட்டாளிகளிடையே சரியான நேரத்திற்கு வராதது போன்ற ஒரு சிறிய காரணத்திற்காக அரங்கேறிய இந்தக் கொலைச் சம்பவம் வதோதரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
