அய்யய்யோ.. டெலிவரி பாய் செய்த ‘அந்த’ ஒரு தவறு… கண் இமைக்கும் நேரத்தில் வெடித்த சிலிண்டர்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யய்யோ.. டெலிவரி பாய் செய்த ‘அந்த’ ஒரு தவறு… கண் இமைக்கும் நேரத்தில் வெடித்த சிலிண்டர்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

பெங்களூரு மல்லேஸ்வரம் காவல் நிலைய எல்லையில் சிலிண்டர் விநியோகம் செய்த டெலிவரி பாய், கேஸ் சிலிண்டரை கீழே இறக்கி வைத்தபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்து விபத்துக்குள்ளானது. வீட்டின் வாசலை துடைத்துவிட்டு அந்த வீட்டுப் பெண்மணி வாசற்படியின் முன் விளக்கேற்றியுள்ளார். அதே நேரத்தில், சிலிண்டரில் இருந்து கேஸ் கசிவதை அறியாத டெலிவரி பாய், சிலிண்டரை வாசலில் கீழே இறக்கி வைத்துள்ளார். விளக்கில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு, கசிந்த எரிவாயுவின் மீது பட்டதால் திடீரென பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.

இந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக டெலிவரி பாய் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மல்லேஸ்வரம் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் உயிரிழப்போ அல்லது கடுமையான பாதிப்போ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in