CRIME
“அடப்பாவமே.. கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவி..” போலீசாரின் கண் முன்னாலேயே கணவன் செய்த கொடூர காரியம்.. வைரலாகும் பெண்ணின் கண்ணீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாகப் பெண் ஒருவரை அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் சித்திரவதை செய்ததோடு, சாலையில் வைத்து போலீசாரின் கண் முன்னாலேயே கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலப்படி, இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு வருடம் வாழ்க்கை நன்றாகச் சென்றுள்ளது; ஆனால், அதன் பிறகு அவரது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அந்தப் பெண் தட்டிக்கேட்டதால், கணவர், மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகிய அனைவரும் சேர்ந்து அவரைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியதோடு, வீட்டின் அறைகளைப் பூட்டித் தனியாக விட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கி வீட்டை விட்டுத் துரத்த முயன்றுள்ளனர்.
புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாமல் அந்தப் பெண் உதவி கேட்டு காவல்துறையினரை வரவழைத்தபோது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் முன்னிலையிலேயே கணவர் அவரைச் சாலையில் வைத்துத் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததோடு, குற்றவாளிகள் மீது எந்தவித உடனடி நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாகக் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மீதும் அந்தப் பெண் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
