LATEST NEWS
“ஆம்னி பேருந்துகளுக்கு அதிரடி எச்சரிக்கை..”அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை..! அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கெடு..!!
தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகள் தொடர்பாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாளை முதல் 7-ஆம் தேதி வரை மொத்தம் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 7,427 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் குறைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அமைச்சர், சென்னையில் இருந்து 16 இடங்களில் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்தார். முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படும் என்பதை செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும், தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் திரும்ப 11,197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
