PET வகுப்பு முடிந்து வகுப்பறைக்குள் நுழைந்ததும் சுருண்டு விழுந்த 9 வயது மாணவி.. அடுத்த நொடியே பிரிந்த உயிர்.. நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

PET வகுப்பு முடிந்து வகுப்பறைக்குள் நுழைந்ததும் சுருண்டு விழுந்த 9 வயது மாணவி.. அடுத்த நொடியே பிரிந்த உயிர்.. நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

Published

on

டெல்லியில் உடற்பயிற்சி பாடவேளை முடிந்து வகுப்பறைக்குத் திரும்பிய 9 வயது பள்ளி மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரமான நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வகுப்பறைக்குள் நுழைந்த அந்த மாணவி, திடீரென தனது இடுப்பில் கையை வைத்தபடி நிலைதடுமாறி தரையில் முகம் குப்புற விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் உடனடியாக ஓடிவந்து, மாணவியை நாற்காலியில் அமரவைத்து முதலுதவி அளிக்க முயன்றுள்ளனர்.

Advertisement

மாணவி மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடற்கூறாய்வு முடிவுகள் வெளியான பிறகே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in