“குடிச்சிட்டு பிரச்சனை பண்ணாதே…” மனைவியை அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்.. இரும்புக் கம்பியால் தாக்கி உறவினரை கொ**ற சக தொழிலாளி..!! – cinefeeds
Connect with us

CRIME

“குடிச்சிட்டு பிரச்சனை பண்ணாதே…” மனைவியை அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்.. இரும்புக் கம்பியால் தாக்கி உறவினரை கொ**ற சக தொழிலாளி..!!

Published

on

வெறையூர் அருகே செங்கல் சூளை தொழிலாளி இரும்புக்கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவருடன் வேலைபார்க்கும் உறவினரான சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் பாண்டியன் (வயது 30). இவரது மனைவி பிரியதர்ஷினி (21). திருவண்ணாமலையை அடுத்த வெறையூர் அருகே உள்ள பெருமணம் பகுதியில் செந்தில் என்பவர் நிலத்தில் செயல்படும் செங்கல் சூளையில் குடும்பத்துடன் பாண்டியன் வேலை பார்த்து வந்தார். இவரது உறவினரான வெள்ளிக்கண்ணு மகன் கன்னியப்பனும் (36) மனைவி கல்பனாவுடன் இதே சூளையில் வேலைபார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கன்னியப்பன் அவ்வப்போது குடித்துவிட்டு மனைவி கல்பனாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை பாண்டியன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன், பாண்டியனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பாண்டியன் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

Advertisement

இது குறித்த புகாரின்பேரில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகராறில் ஈடுபட்ட வரை தட்டிக் கேட்டதால் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in