“அம்மா என்னை விட்ருமா..” சித்திரவதையால் மனமுடைந்த தாய் எடுத்த விபரீத முடிவு.. துடிதுடித்த ஒன்றரை வயது குழந்தை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அம்மா என்னை விட்ருமா..” சித்திரவதையால் மனமுடைந்த தாய் எடுத்த விபரீத முடிவு.. துடிதுடித்த ஒன்றரை வயது குழந்தை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தின் சர்காரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தொடர்ந்து 5 பெண் குழந்தைகள் பிறந்ததால் மாமியார் வீட்டின் சித்திரவதைக்கு ஆளாகி மன உளைச்சலுக்குள்ளான பூஜா என்ற தாய், தனது ஒன்றரை வயது பெண் குழந்தையான ஆராத்யாவைத் தொண்டையை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்திற்காக கணவர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பூஜாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால், அவர் கடந்த ஏழு மாதங்களாகத் தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். சம்பவத்தன்று குடும்பத்தினர் அனைவரும் விவசாய நிலத்திற்குச் சென்றிருந்த வேளையில், குழந்தை ஆராத்யா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால், கடும் மன அழுத்தத்திலிருந்த பூஜா ஆத்திரமடைந்து இக்கோரமான முடிவை எடுத்துள்ளார்.

இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட தாய் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் சடலத்தின் மீது போர்வையைப் போர்த்திவிட்டு, அதன் அருகிலேயே பல மணி நேரம் படுத்துக் கிடந்துள்ளார். மாலையில் பூஜாவின் தாய்மாமா தீபக் வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தையின் உடல் அசையாமல் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்து போர்வையை விலக்கியுள்ளார். அப்போது குழந்தை ஆராத்யா உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சர்காரி காவல்துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொடூரச் செயலில் ஈடுபட்ட தாய் பூஜாவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in