பெரியார் பேரை வச்சு ஊழலா..? அறிவுலகத்தை ஊழல் உலகமாக மாத்திட்டாங்க.. திமுகவைச் சாடிய முதலமைச்சர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரியார் பேரை வச்சு ஊழலா..? அறிவுலகத்தை ஊழல் உலகமாக மாத்திட்டாங்க.. திமுகவைச் சாடிய முதலமைச்சர் விஜய்..!!

Published

on

கோவை பெரியார் அறிவுலகத்தை திமுக ஊழல் உலகமாக மாற்றிவிட்டதாக தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கோவையில் ₹300 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த அறிவு மையத்தை அண்மையில் தான் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகப் பெருமை பேசிக் கொண்ட திமுக தலைமை, நூல்களை வாங்குவதிலும் பார்த்துப் பார்த்து ஊழல் செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இல்லாத பதிப்பகங்களின் பெயரிலும், போலியான மற்றும் தரமற்ற நூல்களைப் பரிந்துரைத்தும் இந்த நிதி முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதாக அவர் தனது எக்ஸ் பதிவில் சாடியுள்ளார்.

Advertisement

திமுகவின் இந்தச் செயல்பாடு தந்தை பெரியாரின் பெயரிலேயே நடத்தப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்றும், இந்த முறைகேடுகளின் காரணமாக திமுக மக்கள் மன்றத்தில் தலைகுனிந்து நிற்பது உறுதி என்றும் முதலமைச்சர் விஜய் தனது பதிவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் கொள்முதல் முறைகேடு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in