“₹400 கோடி திருமண ஆடம்பரம்” அமைச்சர் துரைமுருகன் பேத்தி கல்யாண வீடியோவால் வெடித்த சர்ச்சை.. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்குக் காங்கிரஸ் நிர்வாகி அதிரடி டிமாண்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“₹400 கோடி திருமண ஆடம்பரம்” அமைச்சர் துரைமுருகன் பேத்தி கல்யாண வீடியோவால் வெடித்த சர்ச்சை.. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்குக் காங்கிரஸ் நிர்வாகி அதிரடி டிமாண்ட்..!!

Published

on

திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தி திருமணத்தில் வருமானத்திற்கு அதிகமாகப் பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அது குறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற துரைமுருகன் பேத்தி செந்தாமரை – தீபக் திருமணத்தில், ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள அழைப்பிதழ்கள், 60 வகையான உணவுகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர, மரகத நகைகள் என அதீத ஆடம்பரம் காட்டப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாகக் காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி எழுப்பியுள்ள புகாரில், 2026-ஆம் ஆண்டு தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி துரைமுருகன் குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு வெறும் ₹60 கோடி என்றும், கதிர் ஆனந்தின் சொத்து ₹37 கோடி என்றும் காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திருமணத்திற்கு மட்டும் சுமார் ₹100 கோடி முதல் ₹400 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வளவு பெரிய தொகை துரைமுருகனின் சட்டபூர்வமான வருமானம் மூலம் வந்ததா அல்லது வருமானத்திற்கு மீறிய செலவா என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் இன்னும் கணக்கிடவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மத்திய புலனாய்வு அமைப்புகளான ED மற்றும் CBI ஆகியவை திமுக-பாஜக இடையேயான பாசத்திற்காக அமைதி காப்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏன் இந்தத் திருமண வீடியோக்களை ரசித்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள் என்று சாடியுள்ளார். கடந்த 16 ஆண்டு கால திமுக ஆட்சியில் சுமார் ₹20,000 கோடி மதிப்பிலான அரசுப் பணத்தைச் செலவிடும் துறைகளுக்குப் பொறுப்பு வகித்த அமைச்சரின் வீட்டுத் திருமண ஆடம்பரத்தை வேடிக்கை பார்க்காமல், லஞ்ச ஒழிப்புத்துறை உடனே சொத்துக் குவிப்புச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பிச் சோதனை நடத்த வேண்டும் எனத் தனது பதிவில் அவர் கோரியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in