LATEST NEWS
“பேரன் இறப்புக்குப் பழிவாங்கப் பூசாரி கொலை” செய்வினை மூடநம்பிக்கையால் அரங்கேறிய கொடூரம்.. நாக்கைத் துண்டித்து உடலை மரத்தில் தொங்கவிட்ட கும்பல்..!!
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் சூனியக் காரியங்கள் செய்ததாக எழுந்த மூடநம்பிக்கை மற்றும் பழிவாங்கும் நோக்கில், ஹீராலால் மண்டல் என்ற பூசாரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 2-ஆம் தேதி ஆஸ்மந்நகர் காவல் எல்லைக்குட்பட்ட கர்சோதா கிராமத்தில் இந்த கொடூரக் கொலை நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவரான அனந்தலால் மண்டல் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அனந்தலால் மண்டலின் 6 மாதப் பேரன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளார். பூசாரி ஹீராலால் மண்டல் செய்த செய்வினை மற்றும் சூனியக் காரியங்கள் காரணமாகவே தனது பேரன் இறந்தான் என்ற மூடநம்பிக்கை அனந்தலாலின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது மகன்களான ரிங்கு மண்டல் மற்றும் ஷம்பு மண்டல் ஆகியோருடன் சேர்ந்து பூசாரியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
திட்டத்தின்படி, கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பூசாரியை வழிமறித்த கும்பல், அவர் மீது கடுமையான தாக்குதலை நடத்தி கொலை செய்துள்ளது. பின்னர் இச்சம்பவம் தற்கொலை போலத் தெரிவதற்காக உடலை மரத்தில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது முக்கியப் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு ஆதாரமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; தலைமறைவாக உள்ள அனந்தலாலின் மகன்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
