CRIME
சொகுசு ஹோட்டலில் பயங்கரம்.. போன் கால்களுக்கு வராத பதில்.. கதவைத் திறந்த ஹோட்டல் ஊழியர்கள் அதிர்ச்சி.. அமெரிக்க தொழிலதிபர் தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்..!!
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் அறையில், அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயது தொழிலதிபர் மிச்செல் பிரையன் லீ என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மிச்செல், வணிகக் காரணங்களுக்காக கடந்த நவம்பர் 2 அன்று ஹைதராபாத் வந்துள்ளார். கச்சிபௌலியில் உள்ள ‘எஸ்எல்என் டெர்மினஸ்’ வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘மேரியட் எக்சிகியூட்டிவ் அபார்ட்மெண்ட்ஸ்’ ஹோட்டலின் 12-வது மாடியில் உள்ள அறை எண் 1218-ல் தனது வணிகக் கூட்டாளி டேவிட் வூ என்பவருடன் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், நவம்பர் 4-ஆம் தேதி மாலையில் இருந்து மிச்செல் தனது மொபைல் போன் அழைப்புகளுக்குப் பதிலளிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி அவரது அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, மிச்செல் கட்டிலில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 108 அவசர மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பரிசோதித்ததில், மிச்செல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து கச்சிபௌலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும், இது தற்கொலையா அல்லது ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
