தூங்கியே லட்சாதிபதியான இளம்பெண்… இப்படியும் ஒரு இன்டர்ன்ஷிப்பா? தூங்குவதற்கு சம்பளமாக ரூ.9.6 லட்சம் கொடுத்த பிரபல நிறுவனம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தூங்கியே லட்சாதிபதியான இளம்பெண்… இப்படியும் ஒரு இன்டர்ன்ஷிப்பா? தூங்குவதற்கு சம்பளமாக ரூ.9.6 லட்சம் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

Published

on

மும்பையைச் சேர்ந்த ஜீனியா சாட்டர்ஜி என்ற பெண், ‘வேக்ஃபிட்’ நிறுவனம் நடத்திய தூக்கப் போட்டியில் சிறப்பாகத் தூங்கி ரூ.9.6 லட்சம் பரிசுத் தொகையை வென்று இந்தியாவின் ‘ஸ்லீப் சாம்பியன்’ ஆக உருவெடுத்துள்ளார். வீட்டில் இருந்தபடியே தூங்கிப் பணம் சம்பாதிக்கும் இந்த வினோதமான ‘ஸ்லீப் இன்டர்ன்ஷிப்’ போட்டியில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

பல்வேறு கட்ட நேர்காணல்களுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட 10 போட்டியாளர்களுக்கு, சுமார் 60 நாட்களுக்குத் தங்களின் தூக்கத் திறனை மேம்படுத்தும் சவால்கள் வழங்கப்பட்டன. வெறும் தூக்கம் மட்டுமின்றி, திரைப்படக் காட்சிகளைத் தூக்கத்துடன் இணைப்பது மற்றும் உரையாடல்களுக்கு நடுவே யாருக்கும் தெரியாமல் ‘பெட்ஷீட்’, ‘தலையணை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற பல சுவாரசியமான வாராந்திர கிரியேட்டிவ் டாஸ்க்குகளும் இப்போட்டியில் இடம்பெற்றிருந்தன.

Advertisement

இறுதிப் போட்டியில் நினைவாற்றல் சவால் மற்றும் சிறந்த தூக்க சூழலை ஏலத்தின் மூலம் உருவாக்கும் சவால்கள் வைக்கப்பட்டன. இறுதி இரவில் சிறப்பாகத் தூங்கி அதிக புள்ளிகளைப் பெற்ற ஜீனியா சாட்டர்ஜி முதலிடம் பிடித்து, ரூ.9.6 லட்சம் ரொக்கப் பரிசுடன் அந்நிறுவனம் வழங்கும் இலவச சுற்றுலா வாய்ப்பையும் தட்டிச் சென்றுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in