அய்யோ கொடுமை..! ரூ.4,000 பெட்ரோலை போட்டுட்டு இப்படியா செய்வீங்க..? காரின் ஜன்னலில் தொங்கியபடி இழுத்துச் செல்லப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யோ கொடுமை..! ரூ.4,000 பெட்ரோலை போட்டுட்டு இப்படியா செய்வீங்க..? காரின் ஜன்னலில் தொங்கியபடி இழுத்துச் செல்லப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!

Published

on

லக்னோவின் கோசைகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுல்தான்பூர் சாலையில் உள்ள கிராம ரஹமத் நகரில் அமைந்துள்ள ‘ஜிஎஸ் ஃபில்லிங் ஸ்டேஷன்’ பெட்ரோல் பங்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை சுமார் 4:19 மணியளவில் அங்கு வந்த ஒரு கறுப்பு நிற கார், நில் நம்பர்-5 இல் நின்று 4,000 ரூபாய்க்குப் பெட்ரோல் நிரப்பிக் கொண்டது. அதன் பின்னர், பெட்ரோல் பங்க் ஊழியர் சத்யநாம் என்பவரிடம் பணம் கேட்பதற்குப் பதிலாக, காருக்குள்ளிருந்த நபர் பணம் தருவதாகக் கூறி அவரைப் பேச்சுக் கொடுத்து ஏமாற்ற முயன்றார்.

சத்யநாம் ஸ்வைப் இயந்திரத்துடன் ஓட்டுநரின் ஜன்னல் அருகே சென்றபோது, திடீரெனக் காரின் ஓட்டுநர் வாகனத்தை வேகமாக முன்னோக்கி இயக்கினார். இதைக் கண்டும் எதிர்பாராதவிதமாகக் காரில் தொற்றிக் கொண்ட ஊழியர் கீழே விழாமல் அதன் ஜன்னலைப் பிடித்துத் தொங்கினார். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் மேலும் வேகத்தை அதிகரித்து, பெட்ரோல் பங்க்கிலிருந்து வெளியே நெடுஞ்சாலை வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு அந்த ஊழியரைக் கொடூரமாக இழுத்துச் சென்றார். பின்னர் ஓடும் காரில் இருந்தபடியே அவரைச் சாலையில் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

Advertisement

இந்தச் சம்பவம் குறித்து சக ஊழியர்கள் உடனடியாகப் படுகாயமடைந்த சத்யநாமைக் மீட்டு கோசைகஞ்ச் சமூக நல மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மருத்துவர்கள் அவரை பி.ஜி.ஐ டிரௌமா சென்டருக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்; அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளன. பெட்ரோல் பங்க் மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி பதிவுகள் மற்றும் நெடுஞ்சாலைக் கேமராக்கள் மூலம் தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in