CRIME
ஃபோன் எடுக்காத மகன்.. பதறியடித்து வந்த தந்தை.. கதவை திறந்தபோது காத்திருந்த பயங்கர அதிர்ச்சி.. லிவ்-இன் காதலி வெறிச்செயல்.. நெஞ்சை பதற வைக்கும் பின்னணி..!!
மேற்கு வங்க மாநிலம் வட 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாராசாத் பகுதியைச் சேர்ந்த 25 வயது மென்பொருள் பொறியாளர் சர்தக், சால்ட் லேக் செக்டர் V இல் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் தனது லிவ்-இன் துணையான 24 வயது சஞ்சலிகா பாசுவுடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு இவர்களுக்குள் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த சஞ்சலிகா சர்தக்கை கத்தியால் தோள்பட்டை மற்றும் உடலின் மேல் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த சர்தக்கை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
பாராசாத்தில் வசிக்கும் சர்தக்கின் தந்தை மற்றும் சகோதரி பல மணி நேரமாக அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் கவலையடைந்து, அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கொல்கத்தா குடியிருப்புக்கு வந்தபோதுதான் இந்த விபரீதம் தெரியவந்தது. சம்பவ இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் போலீசார் மீட்டுள்ளனர். இக்கொடூர சம்பவம் தொடர்பாகச் சஞ்சலிகா பாசு மற்றும் இந்தச் சதியில் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது தாய் மௌமிதா பாசு ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
