CRIME
அய்யோ கொடுமை..! சொத்துக்காக இப்படியா பண்ணுவீங்க…? பெரியப்பாவை தள்ளிவிட்டு கொன்ற தம்பி மகன்… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், பெரியப்பாவைக் கீழே தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டத்திற்கு உட்பட்ட நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கும் இவரது தம்பி மகன் தணிகைவேல் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சொத்து விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த தணிகைவேல் தனது பெரியப்பா பாலசுப்ரமணியத்தைக் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாலசுப்ரமணியத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தியாகதுருகம் போலீசார், உயிரிழந்த பாலசுப்ரமணியத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தணிகைவேலைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
