LATEST NEWS
கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரம் இல்லையா..? மனைவியுடன் தகராறு… பெற்ற மகனையே கொலை செய்த கொடூரத் தந்தை.. புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுக்க உத்தரவு..!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தீபாவளி பண்டிகையன்று கணவர் அபிஷேக் மற்றும் மனைவி பிரியங்கா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபிஷேக் தனது மனைவியைத் தாக்கியதுடன், தங்களது குழந்தையையும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அபிஷேக் வேலையின்றி வீட்டில் இருந்து வந்த நிலையில், பிரியங்கா வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
நவம்பர் 9-ஆம் தேதி வேலை முடிந்து பிரியங்கா வீடு திரும்பியபோது, தனது மகன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அபிஷேக்கை போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், தாயார் பிரியங்காவின் கோரிக்கையை ஏற்று, குழந்தையின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியப் புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளியாகியுள்ள புகைப்படத்தில், பச்சிளம் குழந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அபிஷேக் தனது மகனுடன் இருக்கும் காட்சியும், மகனை இழந்த தாய் கதறி அழும் வாக்குமூலமும் இடம்பெற்றுள்ளன.
