CINEMA
“நான் ஒன்னும் உன்கிட்ட காசு வாங்கிட்டு… ஒழுங்கா தாலியோட வா… இல்ல..” பிக்பாஸ் முத்துகுமாரனை மிரட்டிய பெண்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
பிக்பாஸ் பிரபலமான முத்துக்குமரன் குறித்த விவகாரம் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடன் உடல் உறவு வைத்துக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வஹிதா என்ற பெண் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக வீடியோக்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து முத்துக்குமரன் தரப்பில் மௌனம் காக்கப்பட்டு வரும் நிலையில், சமூக வலைத்தளங்களிலும் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்த சூழலில், வஹிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் ஒரு பதிவைப் பகிர்ந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில், “நான் விபச்சாரி அல்ல, உன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஒன்றும் படுக்கவில்லை; காதலற்ற உறவையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் என் கோரிக்கை தாலி மட்டுமே. என் உடலை இலவசமாகப் பயன்படுத்திவிட்டு தப்பிக்க நினைத்தால் உன்னை விடமாட்டேன்” என்று காரசாரமாகத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “தாலியுடன் என்னிடம் வந்துவிடு, இல்லை என்றால் அதற்காக உன்னைத் தேடி வந்து போராடுவேன்” என்று எச்சரித்துள்ள வஹிதா, முத்துக்குமரன் குறித்த தகவலோ அல்லது அவரது சொந்த ஊர் விவரங்களோ தெரிந்தவர்கள் தனக்கு நேரலைச் செய்தி அனுப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
