CRIME
“10 கோடி ரூபாய் மெகா மோசடி..!” வாடிக்கையாளர் பணத்தைச் சுருட்டிய வங்கி ஊழியர்.. நண்பருடன் சேர்ந்து போட்ட பகீர் திட்டம்.. சிபிஐ விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், வங்கி ஊழியர் தீபான்ஷி மற்றும் அவரது நண்பர் அசுதோஷ் ஆகியோரின் சிபிஐ காவல் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
வங்கியில் வாடிக்கையாளர்களால் டெபாசிட் செய்யப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்தை, தீபான்ஷியும் அசுதோஷும் இணைந்து பல்வேறு தனித்தனி வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாகப் பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
