“மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்..” ‘அந்த’ ஒரே ஒரு தவறால் மாட்டிக்கொண்ட திருடன்.. தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் அதிர்ச்சி ட்விஸ்ட்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்..” ‘அந்த’ ஒரே ஒரு தவறால் மாட்டிக்கொண்ட திருடன்.. தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் அதிர்ச்சி ட்விஸ்ட்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

மதுரை பைபாஸ் சாலையில் 15 நாட்களுக்கு முன்பு புதிதாகத் திறக்கப்பட்ட பிரபல ‘தனிஷ்க்’ நகைக்கடையில், சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான 500 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறை, இந்தக் கொள்ளையில் தனி நபர் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. விசாரணையில், அந்த நபர் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளையன் கடந்த ஒரு வாரமாக நகை வாங்க வருவது போல நடித்து, கடைக்குள் இரவு பகலாக வேவு பார்த்துள்ளான். கையில் கட்டுடனும், தலையில் தொப்பியுடனும் தினமும் விதவிதமான ஆடைகள் மற்றும் மாறுவேடங்களில் வந்து கடையின் ஒவ்வொரு பகுதியையும் துல்லியமாகக் கண்காணித்துள்ளான். குறிப்பாக, கடையில் லிப்ட் வேலை செய்யாததையும், பணிகள் நடைபெற்று வரும் இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களில் ஆள் நடமாட்டம் இல்லாததையும் தெரிந்து கொண்டு, கடந்த 5-ஆம் தேதி கொள்ளையடித்துத் தப்பிப்பதற்கான ஒத்திகையும் பார்த்துள்ளான்.

Advertisement

வாடிக்கையாளர் போல நடித்துத் தான் முன்கூட்டியே பார்த்து ரசித்துத் தேர்வு செய்த நகைகளை மட்டுமே, கொள்ளையடிக்க வந்தபோது தேடித்தேடி மூட்டையில் அள்ளிச் சென்றுள்ளான். எந்தத் தடயமும் சிக்காமல் இருக்கத் தினமும் உடைகளை மாற்றி வந்த அந்த நபர், வேவு பார்த்த நாள் முதல் கொள்ளையடித்த நாள் வரை ஒரே நிறத் தொப்பியை மட்டும் மாற்றாமல் அணிந்து வந்துள்ளான். ‘மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்’ என்ற கதையாக, அந்தத் தொப்பியே தற்போது காவல்துறையினர் அவனை நெருங்குவதற்கான முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in