LATEST NEWS
தவெக-வில் இணையும் முக்கிய Ex அமைச்சர்..? செங்கோட்டையன் கொடுத்த ‘பகீர்’ ஹின்ட்.. கொங்கு மண்டலத்தில் பரபரப்பு..!!
திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவிருப்பதாக செங்கோட்டையன் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில் ஜெயக்குமார் போட்டியிடுவார் எனக் குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலில் திமுக மற்றும் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் இணைந்து அவருக்காக வாக்கு சேகரிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையனின் இந்தப் பேச்சு, தோப்பு வெங்கடாசலத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை உறுதிப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.
