LATEST NEWS
நொடியில் மாறிய திருமணக் கொண்டாட்டம்… சேற்றில் சிக்கித் தவித்த கர்ப்பிணி மணமகள்.. அடுத்து நடந்த டுவிஸ்ட்… பதைபதைக்க வைக்கும் சம்பவம்…!!
வியட்நாமில் திருமண ஊர்வலத்தின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், திருமணக் கார் சேற்று வயலில் கவிழ்ந்ததில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வியட்நாமின் துயேன் குவாங் மாகாணத்தில், மணமகள் தன் சொந்த வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு காரில் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்து விலகி சுமார் ஒரு மீட்டர் ஆழமுள்ள சவக்காட்டுச் சேற்று வயலில் தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மணமகன் மற்றும் கர்ப்பிணியான மணமகள் இருவரும் சேற்றில் முழுமையாகச் சிக்கிக் கொண்டனர். குறிப்பாக மணமகள் அணிந்திருந்த வெள்ளை நிறத் திருமண ஆடை முழுவதும் கரும்சேற்றால் மூடப்பட்டது. மணமகள் கர்ப்பமாக இருப்பதால், விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்களின் இதயம் ஒரு கணத்திற்கு நின்றுவிடும் அளவுக்குப் பதற்றம் ஏற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட அப்பகுதி மக்களும், இளைஞர்களும் ஒன்றிணைந்து காரை மீட்டு, நல்வாய்ப்பாகப் புதுமணத் தம்பதியினரை பலத்த காயமின்றிப் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக மணமகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தாயும் அவளது கருவில் உள்ள குழந்தையும் எந்தவிதப் பாதிப்புமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக உறுதிப்படுத்தினர். பின்னர் இருவரும் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, திட்டமிட்டபடியே திருமணச் சடங்குகளை மகிழ்ச்சியுடன் வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
