LATEST NEWS
“மக்கள் தண்ணீரை வீணாக்கினால் அபராதம்.. அரசே வீணாக்கினால் என்ன தண்டனை..?” கொந்தளித்த மக்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் புல்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பெத்தரெட்டிப்பேட்டை மற்றும் ராயபாடு ஆகிய கிராமங்களுக்கு இடையே, ‘மிஷன் பகீரதா’ திட்டத்தின் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலைகளில் ஆறாக ஓடி வீணாகி வருகிறது. பல நாட்களாக இவ்வாறு குடிநீர் வீணாகிச் செல்வதைத் தடுக்க வேண்டிய மிஷன் பகீரதா துறை அதிகாரிகள், அதனைச் சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சாதாரணப் பொதுமக்கள் தண்ணீரை வீணாக்கினால் உடனடியாக அபராதம் விதிக்கும் அதிகாரிகள், அரசின் அலட்சியத்தால் இவ்வளவு பெரிய அளவில் குடிநீர் வீணாவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என விமர்சகர்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசுத் துறைகளுக்கு என்று எந்த விதிமுறைகளும் இல்லையா எனக் கொந்தளிக்கும் அப்பகுதி மக்கள், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில் மதிப்புமிக்க குடிநீர் வீணாவதைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாகக் குழாயைச் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
