“நீங்கள் என்ன தூய சக்தி..? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வைத் தகுதி நீக்கம் செய்யத் துணிவு இருக்கிறதா..?” முதலமைச்சருக்கு சீமான் நேரடி சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீங்கள் என்ன தூய சக்தி..? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வைத் தகுதி நீக்கம் செய்யத் துணிவு இருக்கிறதா..?” முதலமைச்சருக்கு சீமான் நேரடி சவால்..!!

Published

on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக முதலமைச்சர் மற்றும் ஆளும் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனக் கூறும் காங்கிரஸ் கட்சியுடன் தவெகவால் எவ்வாறு கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முடிந்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், மாநில உரிமைகளைப் பறிக்கும் கட்சியுடன் இணைந்து மக்களின் உரிமைகளை எப்படிக் காப்பாற்ற முடியும் எனச் சாடினார். மேலும், முதலமைச்சர் பேசமாட்டார், செயலில் காட்டுவார் எனக் கூறுபவர்கள், இதுவரை அவர் காட்டிய செயல்களில் ஒன்றையாவது கூற முடியுமா என சவால் விடுத்தார்.

செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் மற்றும் துணை சபாநாயகர் விவகாரம் ஆகியவற்றில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முதலமைச்சருக்குத் துணிவில்லை என சீமான் குற்றம் சாட்டினார். “நீங்கள் என்ன தூய சக்தி? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தினால் வெற்றி பெற முடியாதா? அந்த நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் எப்படி மாஸ் ஹீரோ?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய அவர், மக்களைச் சந்திக்க ஏன் பயப்பட வேண்டும் என்றும், தேர்தலில் தோற்றாலும் களத்தில் நிற்பவனே உண்மையான வீரன் மற்றும் தலைவன் என்றும், பெரும்பான்மையை விட நேர்மையே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in