CRIME
இது என்ன கொடுமை.. திருமணமான 12 மணி நேரத்திலேயே புதுமணப் பெண் மர்ம மரணம்.. இன்ஸ்டாகிராம் காதலன் செய்த பகீர் காரியம்.. அதிர்ச்சி பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மவூ மாவட்டத்தில், திருமணமான 12 மணி நேரத்திலேயே 23 வயது புதுமணப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக அறிமுகமான அஸ்கா மற்றும் ஹரிச்சந்திரா ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் திருமணச் சடங்குகள் முடிந்து, கணவர் ஹரிச்சந்திரா தனது மனைவி அஸ்காவை முதன்முறையாகத் தனது சொந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மறுநாள் சனிக்கிழமை காலையிலேயே அஸ்கா உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தனது தங்கையின் மரணத்திற்கு வரதட்சணைக் கொடுமையே காரணம் என அஸ்காவின் சகோதரர் குட்டு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருமணத்தின் போது கேட்ட இருசக்கர வாகனம் மற்றும் 50,000 ரூபாய் வரதட்சணைப் பணத்தைக் கொடுக்காததால், கணவர் ஹரிச்சந்திராவே தனது தங்கையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டதாக அவர் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கணவர் ஹரிச்சந்திராவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
