CRIME
நொடியில் பைக்கின் குறுக்கே பாய்ந்த எமன்.. அடுத்த நொடியே தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்.. பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி…!!
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினர் மீது மாடு ஒன்று திடீரென மோதியதில் விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சுற்றித் திரிந்த மாடு எதிர்பாராத விதமாக வாகனத்தின் குறுக்கே வந்ததால், வாகனத்தை ஓட்டிச் சென்றவர் நிலைதடுமாறித் தம்பதியினர் இருவரும் சாலையில் விழுந்தனர். இந்த விபத்து நடந்த விதம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகளின் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
