“அன்புமணிக்கு நேரடி செக்..” புதிய கட்சி தொடங்கும் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி..! பாமகவில் மீண்டும் பூகம்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அன்புமணிக்கு நேரடி செக்..” புதிய கட்சி தொடங்கும் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி..! பாமகவில் மீண்டும் பூகம்பம்..!!

Published

on

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி, வரும் டிசம்பர் 6, 2026 அன்று சென்னையில் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவில் ஏற்பட்ட உள்குத்து மற்றும் பிளவு காரணமாக, அன்புமணி தரப்பு அதிகாரப்பூர்வ சின்னத்தை பெற்று வெற்றி பெற்ற நிலையில், ராமதாஸ் தரப்பு கடுமையான தோல்வியை சந்தித்தது. தேர்தலுக்கு பிறகு தந்தையும் மகனும் இணைந்தாலும், அன்புமணியின் முழுமையான கட்சி ஆதிக்கத்தை ஏற்காத ராமதாஸின் தீவிர ஆதரவாளர்கள் தற்போது அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement

இந்த சூழலில்தான், ராமதாஸின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து ஸ்ரீகாந்திமதி புதிய கட்சியை தொடங்க உள்ளார். வன்னியர் சமுதாய வாக்குகளை குறிவைத்து உருவாகும் இந்த புதிய அரசியல் இயக்கம், எதிர்காலத்தில் அன்புமணி தலைமையிலான பாமகவிற்கு நேரடி போட்டியாக மாறுமா அல்லது தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in