CINEMA
“தாலி கட்டுவேன் என சத்தியம் செய்து.. ‘அந்த’ இரவில் நடந்தது இதுதான்…” பிரபல பேச்சாளர் முத்துக்குமரன் மீது இளம்பெண் பகீர் புகார்..!!
பேச்சாளரும் ஊடகப் பிரபலமுமான முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிவிட்டதாக வஹிதா அக்தர் என்ற பெண் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடையநல்லூர் பிரச்சினையின் போது தனக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி முத்துக்குமரன் தானாக முன்வந்து பழகியதாகவும், ஆரம்பத்திலேயே தான் ஒரு தீவிரமான திருமண உறவிற்கு மட்டுமே தயாராக இருப்பதாகத் தெளிவுபடுத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது சந்திப்பிலேயே தாலி கட்டித் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த முத்துக்குமரன், மூன்றாவது சந்திப்பின் போது பொய்யான சத்தியங்களைச் செய்து தன்னை உடல்ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக வஹிதா குற்றம்சாட்டியுள்ளார். அதன்பிறகு திருமணத்திற்குத் தயாராக இல்லை எனக் கூறி அவர் தன்னைத் தவிர்த்துவிட்டதால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுமாறு முத்துக்குமரன் கெஞ்சியதாகவும், ஒரு கட்டத்தில் தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதாகவும் வஹிதா வேதனையுடன் பகிர்ந்துள்ளார். மற்றொரு சந்திப்பின் போது தனக்கு மது ஊற்றிக் கொடுக்க முயன்றதாகவும், உடல்ரீதியான உறவுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்ததால் நள்ளிரவில் பயந்து போய் அவரது வீட்டிலிருந்து வெளியேறி வாடகை கார் மூலம் வீடு திரும்பியதாகவும் அவர் விவரித்துள்ளார். முத்துக்குமரனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றும் பலனளிக்காததால், தற்போது காவல்துறையின் உதவியை நாடியுள்ளதாகவும், தனக்கு வாக்குறுதி அளித்தபடி அவர் தாலி கட்ட வேண்டும் என்றும் வஹிதா கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, வஹிதா தன் மீது அவதூறு பரப்புவதாக முத்துக்குமரன் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை எனக் கூறி காவல்துறை அதனைத் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
