LATEST NEWS
“அந்த இடத்திற்கு காதலியுடன் சென்றேன்” ஆனால்… முதல்முறையாகக் காதலி குறித்து மனம் திறந்த ராகுல் காந்தி..!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது காதலி குறித்த சுவாரசியமான அனுபவத்தை முதல்முறையாகப் பொதுமேடையில் பகிர்ந்துள்ளார். சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இந்தத் தகவலை மனம் திறந்து கூறினார்.
தனது தாயும் தந்தையும் முதன்முதலில் சந்தித்த கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள உணவகத்திற்குத் தனது காதலியுடன் சென்றதாக ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். ஆனால், அந்த உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் பிடிக்காமல் போனதால், அந்தச் சந்திப்பு சற்று கசப்பான அனுபவமாக மாறிவிட்டதாக அவர் அரங்கில் கலகலப்பாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, அந்தக் காதலி தற்போது தனது நெருங்கிய தோழியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தீவிர அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் பகிர்ந்து கொண்ட இந்தச் சொந்த வாழ்க்கை அனுபவம், விழாவில் பங்கேற்றவர்களிடையே பெரும் கவனத்தையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியது.
